இலங்கையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் தீர்த்தத்திருவிழா திங்கட்கிழமை அன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. நல்லூரானின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி 25ஆவது நாளான திங்கள் அன்று காலை பல்லாயிரக் கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கந்தன் தீர்த்தமாடினார்.
என்றுமில்லாதவாறு இம்முறை நல்லூரானின் தேர் தீர்த்தத் திருவிழாக்களில் வெளிநாடுகளிலிருந்தும்-உள்நாட்டிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் பக்தியோடு கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.