உலகில் 100 கோடி மக்கள் பசியால் வாடுகின்றனர்

மனிதன் வாழ்வதற்கு தேவையான சத்தாண உணவு இன்றி, உலக அளவில் 100 கோடி மக்கள் பசியால் வாடுவதாக ஐ.நா. உணவுக் கழகம் தெரிவித்துள்ளது.
 இன்றைய நவீன உலகில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பொருளாதார வளர்ச்சியை எட்ட போட்டி போட்டு முன்னேறுகின்றன.

சில நாடுகளில் மனிதன் வாழ தேவையான உணவு கூட கிடைக்காமல் தவிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. தற்போது உலகில் வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டி வரும் நாடுகளாக இந்தியா, சீனா விளங்குகிறது. ஆனால் அந்நாடுகளில் பசியால் வாடும் மக்கள் அதிகமாக உள்ளனர். இதுகுறித்து ஐநாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (எப்ஏஓ) தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:கடந்த சில ஆண்டுக்கு முன் சத்தான உணவு உண்ண வழியில்லாதவர்களின் எண்ணிக்கை 1.02 கோடியாக இருந்தது.

தற்போது 92.5 கோடி மக்கள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதில் ஆசியா, ஆப்ரிக்கா நாடுகளை சேர்ந்தவர்களே அதிகம். அன்றாட தேவையான சத்தான உணவு கிடைக்கப் பெறாதவர்களில் 40 சதவீதம் பேர் இந்தியா, சீனாவை சேர்ந்தவர்கள். மேலும் வங்காளதேசம், இந்தோனேசியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பா ஆகிய நாடுகளிலும் அதிகமானோர் வாழ்வதாக தெரிய வந்துள்ளது.


எப்ஏஓவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், வளர்ந்து வரும் நாடுகளில் 1990&92ல் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய இயலாதவர்களாக இருந்த 20 சதவீதம் பேரை, 2015ம் ஆண்டு வாக்கில் 10 சதவீதமாக குறைக்கவும், வருமான வளர்ச்சி அதிகம் உள்ள நாடுகளின் உதவியுடன் நடப்பு ஆண்டில் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கையில் 16 சதவீதத்தை குறைக்கவும் முயற்சிகள் எடுத்து வருவதாக தெரிவித்தார்.


அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் காரணமாகவும் சமுதாயத்தில் அடித்தட்டில் வாழும் மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்க முடிவதில்லை. எனவே இதை கருத்தில் கொண்டு எப்ஏஓ இம்மாதம் 24ம் தேதி உணவுப் பண்டங்களின் விலையேற்றம் குறித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux