தீவகம் வேலணையில் மின்சாரசபைக்கான புதிய கட்டிடம் ஒன்று மிக விரைவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேலணையில் மின்சாரசபையின் அலுவலகம் இதுவரையும் தனியார் இல்லம் ஒன்றினிலேயே தற்காலிகமாக இயங்கி வந்ததாகவும்-தற்போது இலங்கை மின்சாரசபையினால் அதற்கான நிரந்தரக்கட்டிடம் ஒன்று பல லட்சம் ரூபாக்களில் அமைக்கப்பட்டுள்ளதாகவும்-இக்கட்டிடத்தின் திறப்புவிழா மிகவிரைவில் நடைபெறவுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இக்கட்டிடம் வேலணை வைத்தியசாலைக்கும்-வேலணையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரதேச செயலகத்திற்கும் அருகிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.