மண்டைதீவு மேற்குப்பகுதியில் அமைந்துள்ளதும்-அண்மையில் வடமாகாண முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்ட பொதுவைத்திய சாலைக்கு அருகில் அமைந்துள்ளதுள்ளதுமான மிகவும் பழைமையான கண்டுப்புளியடி சிவ உக்கிர வீரபத்திரர் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும்-புலம்பெயர்ந்து வாழும் மண்டைதீவு மக்களுடன் ஊரில் வசிக்கும் மக்களும் இணைந்து இவ்வாலயத்தினை புதிய வடிவில் அழகாக புனரமைத்து வருவதாகவும்- அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மண்டைதீவிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற பெருமளவான இந்து மக்கள் மீளக்குடியேறாவிட்டாலும்-தாம் முன்னர் வழிபட்ட ஊரிலிருக்கும் ஆலையங்கள் அனைத்தையும் முடிந்த வரை புனரமைத்து வருடந்தோறும் திருவிழாக்களை விமர்சையாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
கருங்கல்லிலான அழகிய வேலைப்பாடுகளுடன் புதிய வடிவமைப்பில் புனரமைக்கப்பட்டு வரும்வீரபத்திரர் ஆலயத்தின் புனரமைப்புக்கு- புலம்பெயர் நாடுகளிலும்-மற்றும் மண்டைதீவுக்கு வெளியிலும் வசிக்கும் மண்டைதீவு மக்களிடமிருந்து நிதி உதவிகளை எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.