மண்கும்பான் செட்டிகாட்டு ஞானவைரவரையும் விட்டு வைக்காத மாபாவிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

மண்கும்பான் செட்டிகாட்டு ஞானவைரவரையும் விட்டு வைக்காத மாபாவிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

03

கடந்த வியாழக்கிழமை 31.07.2014 அன்று இரவு  மண்கும்பான் செட்டிகாடு ஶ்ரீ ஞான வைரவர் ஆலயத்தினுள் புகுந்த  விஷமிகள் ஆலயத்திற்குள் இருந்த விளக்குகளை அடித்து நொருக்கியதுடன்- அங்கிருந்த சூலம் விக்கிரகங்கள் முதலியவற்றைத் திருடிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

அண்மைக்காலங்களில் இந்து ஆலயங்களில் உள்ள   விக்கிரகங்கள் திருடப்படுவதும் ஆலய சொத்துகளுக்கு சேதம் விளவிப்பதும் தொடர்ந்து  வருவதாக மக்கள் கவலை கொண்டுள்ளனர்.

மண்கும்பான் மக்களால் காலங்காலமாக பக்தியோடும் படையலோடும்  பலி கொடுக்கப்பட்டு வழிபடுகின்ற-செட்டிகாடு ஸ்ரீ ஞானவைரவரின் ஆலயத்திற்குள் புகுந்து சேதம் விளைவித்தவர்களுக்காக நாம் வெளியிடும் சில படங்கள் இவை….

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

மண்கும்பான் ஸ்ரீ ஞான வைரவா-இதோ எங்கள் காணிக்கை…

இந்து ஆலயங்களை திட்டமிட்டுச் சிதைப்பவர்களை அடையாளம் காட்டுவதற்காக  நாம் உனக்கு தரும் காணிக்கையினை ஏற்று -சதிகாரர்களை உடனே அடையாளம் காட்டு…..

SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux