ஆடிப்பூரத்தினை முன்னிட்டு-அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள மூன்றுமுடி அம்மன் ஆலயத்தில் விஷேட திருவிழா நடைபெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாலயத்தின் நிர்வாக உறுப்பினராகவும்-ஆலயத்தோடு தன்னை நீண்டகாலமாக இணைத்துக் கொண்டு ஆலய வளர்ச்சிக்கு உழைத்தவருமாகிய,பெரியவர் முத்துக்குமார் அவர்கள்-நீண்ட காலத்தின் பின்னர லண்டனிலிருந்து ஊர்வந்து மூன்றுமுடி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற-ஆடிப்பூரத் திருவிழாவில் தமது துணைவியாருடன் கலந்து அம்மனைத் தரிசித்தார் என்ற தகவலையும் இத்தோடு இணைத்துக் கொள்கின்றோம்.
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல வருமா????