அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்தவரும்-லண்டனில் வசிப்பவருமாகிய, திரு ஏகாம்பரம் மனோகரன் அவர்களின் மைத்துணரின் புதல்வி செல்வி தர்மகுலராஜா (ராசா) சயந்தினி அவர்களின் பூப்புனித நீராட்டு விழா-கடந்த 23-07-2014 அன்று நயினாதீவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
திரு ஏகாம்பரம் மனோகரன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் – நயினாதீவில் நடைபெற்ற-செல்வி தர்மகுலராஜா சயந்தினி அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் சுருக்கமான பதிவினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
திரு தர்மகுலராஜா அவர்கள்-பரிஸ் லாச்சப்பலில் புகழ்பெற்ற-எம்.ஜி.எஸ் நிறுவன உரிமையாளரின் ஒன்றுவிட்ட சகோதரர் என்பதுடன்-பிரான்ஸிலேயே குடும்பத்துடன் வசித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.