ஆடி அமாவாசையை முன்னிட்டு-வரலாற்று சிறப்பு மிக்க ஈழத்துப் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் சனிக்கிழமை அன்று ஆடி அமாவசை விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
கீரிமலை தீர்த்த கேணியில் பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட அடியவர்கள் நீராடி தமது தந்தை மற்றும் மூதாதையர்களின் பெயர் நட்சத்திரங்களை அந்தணர்களிடம் கூறி தமது பிதிர்க்கடன்களை நிறைவேற்றினர்.
பிதிர்கடன் நிறைவேற்ற வரும் பக்தர்களிற்கு அருள் பாலிக்க நகுலேஸ்வர பெருமானும் பார்வதி அம்மையும் கீரிமலை தீர்த்த கேணி பகுதியில் அமைந்துள்ள எழுந்தருளி மண்டபத்தில் எழுந்தருளினர்.
மேலும் பிதிர்கடன் நிறைவேற்றும் வழிபாட்டில் புலம்பெயர் நாடுகளில் உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வருகை தந்து தமது பிதிர்க்கடன்களை நிறை வேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தீவகம் சாட்டி வெள்ளைக்கடற்கரையிலும் மக்கள் தமது தந்தை மற்றும் மூதாதையர்களுக்காக பிதிர்கடன்களை நிறைவேற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை-உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்
வீடியோ-உதயன் இணையம்