அனைத்து  தொடர்புகளுக்கும்"/>
அல்லைப்பிட்டி சிந்தாமணிப்  பிள்ளையாருக்கு விரைவில் கும்பாபிஷேகம்-மூன்று லட்சம் வரை நிதி வழங்கியவர்களின் பெயர் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையாருக்கு விரைவில் கும்பாபிஷேகம்-மூன்று லட்சம் வரை நிதி வழங்கியவர்களின் பெயர் விபரங்கள் இணைப்பு!

இது பழைய செய்தி

மண்டைதீவில் ஒரு விநாயகர் ஆலயம்-அதுதான் திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலயம்

மண்கும்பானில் ஒரு விநாயகர் ஆலயம்-அதுதான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம்

இவை இரண்டுக்கும் நடுவில் அல்லைப்பிட்டியில் ஒரு காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய  ஆலயமாகவும்-எம்முன்னோர்களினால்  பக்தி்யோடு பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட ஆலயமாக சிறப்புடன் விளங்கியதுமான ஆலயம் தான்  சிந்தாமணிப்பிள்ளையார் (சருகுப்பிள்ளையார்)ஆலயம் ஆகும்

இந்த ஆலயத்திற்கு அருகில் குடுப்பத்துடன் நீண்டகாலமாக வசித்து வந்ததுடன் – அல்லைப்பிட்டியில் அமைந்திருந்த ஏனைய இந்து ஆலயங்களின் பூசகராகவும் பணிபுரிந்தவர் தான்  அமரர் நடேஸ்வரர் குருக்கள் ஆவார்.

அல்லைப்பிட்டியில் பெரும் சிறப்போடும் புகழோடும் ஒரு காலத்தில்  விளங்கிய -சிந்தாமணிப்பிள்ளையாரின் இன்றைய நிலையோ  கண் கலங்க வைக்கின்றது.

ஆலயத்திற்குள் இருந்த விக்கிரகங்கள்-சிலைகள் அனைத்தும் களவாடப்பட்ட நிலையில்- வெறுமையாகக் காணப்படும் ஆலயம்- கால்நடைகளின் கூடாரமாகவும்-சமூக விரோதிகளின் மறைவிடமாகவும் மாறியிருப்பதாக -இவ்வாலயத்தோடு தொடர்பு பட்டவர்கள்  கவலையோடு எமது இணையத்திற்கு தெரிவித்தனர்.

அன்பான புலம் பெயர் அல்லைப்பிட்டி மக்களே!

எம்முன்னோர்களினால் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட-அல்லைப்பிட்டி சிந்தாமணிப்பிள்ளையாரின் இன்றைய நிலையினை சுருக்கமாக மேலே பதிவு செய்துள்ளோம்.மீண்டும் இந்த ஆலயத்தினுள் விநாயகர் விக்கிரகம் வைத்து கும்பாபிஷேகம் செய்து ஒரு கால பூஜையாவது செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

மிகமிகப் பழமையான  சிந்தாமணிப் பிள்ளையாரை-அழியவிடாமல் காப்பாற்ற வேண்டிய முழுப்பொறுப்பும்-புலம் பெயர்ந்து வாழும் அல்லைப்பிட்டி மக்களையே சார்ந்துள்ளது .

அனைத்து  தொடர்புகளுக்கும்

தொலைபேசி இலக்கம்-0033651071652

அல்லையூர் இணையம் மேற்கொண்ட கடும் முயற்சியின் பலனாக-இதுவரை 3 லட்சம்  ரூபாக்கள் வரை வழங்குவதற்கு புலம்பெயர்ந்து வாழும் அல்லைப்பிட்டி மக்கள் முன் வந்துள்ளனர்.அத்தோடு இச்செய்தியினைப் பார்வையிடும் நீங்களும் உங்களால் முடிந்த நிதியுதவியினை வழங்க முன் வரவேண்டும் என்று பணிவோடு வேண்டுகின்றோம்.

இது புதிய செய்தி

அல்லைப்பிட்டியில் பாழடைந்து கிடக்கும்  ஒரு ஆலயத்தினை பாதுகாத்து பராமரித்து பூஜை நடத்துவதற்கு  பூரண  ஒத்துழைப்புத் தருமாறு  உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

பணம் வழங்குவதற்கு ஒப்புக் கொண்டவர்கள்

01-அமரர் திருசெல்லத்துரை தவவிநாயகம் குடும்பத்தினர்-50 ஆயிரம் ரூபாக்கள்

02-அமரர் திரு வாவதேவன் குடும்பத்தினர்-50 ஆயிரம் ரூபாக்கள்

03-அமரர் இரத்தினசபாபதி குடும்பத்தினர்-50 ஆயிரம் ரூபாக்கள்

04-அமரர்-செல்லத்துரை வேலாயுதபிள்ளை -குடும்பத்தினர்-50 ஆயிரம் ரூபாக்கள்

05-அமரர் கதிர்காமு குடும்பத்தினர்–20 ஆயிரம் ரூபாக்கள்

06-அமரர் பொன்னம்பலம் செல்லையா குடும்பத்தினர்–20 ஆயிரம் ரூபாக்கள்

07-திரு செல்லத்துரை நடேசபிள்ளை குடும்பத்தினர்–50 ஆயிரம் ரூபாக்கள்-

விரைவில் மேலே குறிப்பிடப்பட்டுள்ளவர்களிடம் இருந்து  பணம் திரட்டப்பட்டு-ஆலய நிர்வாகத்திற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என்பதனையும்-அதனைத் தொடர்ந்து  சாமிசிலை வைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று நம்புகின்றோம்.

100_0324 DSC_04711 DSC_0470 DSC_0468 DSC_0466 DSC_0467

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux