தீவகம் மண்டைதீவு அருள் மிகு ஸ்ரீ சிவகாம வல்லி அம்பிகை சமேத ஸ்ரீமத் தில்லேஸ்வரப் பெருமானின் ஏக குண்ட பஷ மஹா கும்பாபிஷேகம் கடந்த [09.07.2014] புதன்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நீண்டகாலமாக பராமரிப்பற்று புதர்மண்டிக்கிடந்த இவ்வாயத்தின் சுற்றுப் பகுதிகள் சிரமதானம் மூலம் பல மாதங்களுக்கு முன்னர் துப்பரவு செய்யப்பட்டது.
அதன்பின்னர்-உள்நாட்டிலும்-புலம்பெயர்நாடுகளிலும் வசிக்கும் மண்டைதீவு மக்களின் நிதிப்பங்களிப்புடன் வேகமாகப் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
படங்கள்-நயினை எம்.குமரன்