மண்டைதீவு பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின் முழுமையான வீடியோப் பதிவு!

மண்டைதீவு பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின் முழுமையான வீடியோப் பதிவு!

10491260_292080924296409_1141226347344421151_n

மண்டைதீவு பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா-14-07-2014 திங்கட்கிழமை அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் மாலை ஆறு மணிக்கு ஆரம்பமான திருவிழா மறுநாள் அதிகாலை நான்கு மணிவரை நடைபெற்றதாக-எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.உள்ளூர் மற்றும் வெளியிடங்களில் வசிக்கும் கண்ணகை அம்மனின் பக்தர்கள் பெருமளவில் வருகை தந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் பார்வையிடும் வீடியோவுக்கான  அனுசரணை வழங்கியவர்

மண்டைதீவு கண்ணகை அம்மன் ஆலய  பஞ்ச கர்த்தாக்களில் ஒருவரும்-ஆலயத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து முன்னின்று பாடுபட்டு வந்தவருமாகிய- அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம்( சின்னத்துரை)  அவர்களின் ஞாபகார்த்தமாக-அவரது புதல்வர் திரு ஏகாம்பரம் மனோகரன் அவர்களின் நேரடி நிதி உதவியில்  அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட வீடியோவினை-உலகமெல்லாம் பரந்து வாழும் கண்ணகை அம்மன் பக்தர்களின் பார்வைக்காக சமர்ப்பிக்கின்றோம்.

கடந்த வருடமும் அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் ஞாபகார்த்தமாக-கண்ணகை அம்மனின் திருவிழாவினை வீடியோப்பதிவு செய்து வெளியிட்டிருந்தோம் என்பதனை சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

மண்டைதீவு கண்ணகை அம்மனுக்கு தொண்டாற்றி-அமரத்துவம் அடைந்த,சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல மண்டைதீவு பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மனை வேண்டி நிற்கின்றோம்.

gf

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux