தீவகம் மண்டைதீவில் புதிதாக அமைக்கப்பட்ட – பிரதேச வைத்தியசாலையின் திறப்பு விழா-17-07-2014 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11 .00 மணிக்கு இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டதாகவும்-மேலும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சுகாதார சுதேச வைத்தியத் துறை அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், மற்றும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச் சந்திரன், ஈ.சரவணபவன், சி.சிறிதரன் ஆகியோரும் கெளரவ விருந்தினர்களாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, வட மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், இ.ஆனோ ல்ட் மற்றும் வட மாகாண சுகாதார சுதேச வைத்தியத் துறை அமைச்சின் செய லாளர் இ.ரவீந்திரன், வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சி.சிவராசா, வேலணை பிரதேச செயலாளர் திருமதி ச.மஞ்சுளா தேவி ரதீசன் ஆகியோரும் கலந்து கொண்டதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.