அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருந்திருவிழா-07-07-2014 திங்கட்கிழமை அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்பது தினங்கள் மாலையில் சிறப்பு திருப்பலிப் பூஜைகள் நடைபெற்று 16-07-2014 புதன்கிழமை அன்று அன்னையின் பெருநாள் விழா வெகு சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லைப்பிட்டியில் வசிக்கும் அனைத்து மக்களாலும் மத வேறுபாடின்றி வணக்கப்படும் தெய்வமாக-திகளும் புனித கார்மேல் அன்னையின் பெருநாள் விழாவினைக்கான உள்ளாட்டு மக்களுடன் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து வருகைதந்த பெருமளவான மக்களும் கலந்து கொண்டு அன்னையின் அருளாசி வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
அன்னையின் பெருநாளின் வீடியோப்பதிவு மிக விரைவில் இணைக்கப்படும்
படங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!