கன்றுடன் உலாவித்திரிந்த தாய்பப்பசுவை-இறைச்சிக்காக வெட்டிக் கொன்று தின்ற இரக்கமற்ற செயல் ஒன்று வெள்ளிக்கிழமை இரவு தீவகத்தின் ஒரு கிராமத்தில் நடந்துள்ளதாக ஆதாரத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.இரக்கமற்ற மனித இனத்தின் செயல்பாடுகளில் இதுவும் ஒன்றாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது என்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
மாட்டிறைச்சி உண்பது குற்றமல்ல ஆனால் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும்-சட்டவிரோதமாக களவாடப்பட்டு-கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டி விற்பது முற்றாக தடுக்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இச்சம்பவம் பற்றி பொலிசாருக்கும்-வேலணை பிரதேசசபையின் தவிசாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.