யாழில் சட்டவிரோத கழிவுநீர் தடுப்புச் சுவர்கள் மாநகரசபையால் இடிப்பு!

யாழ். நகரில் அமைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற ஓன்பது கழிவு நீர் தடுப்பு சுவர்களை பொலிஸ் பாதுகாப்புடன் யாழ் 
மாநகர சபை இடித்து உடைத்துள்ளது.
வாய்க்கால்களில் கழிவு நீர் தேங்கி நிற்பதைத் தடுப்பதன் மூலம் டெங்கு நோயை ஒழிக்கும் திட்டத்தின் கீழ் மாநகர சபையால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இராசாவின் தோட்டத்திலிருந்து ஆரிய குளத்துக்கு செல்லும் 200 மீற்றர் நீளமான கால்வாயில் இவ்வனுமதியற்ற தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன.

Leave a Reply