அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவரும்-அல்லையூர் இணையத்தின் இயக்குநருமாகிய திரு செல்லையா சிவாவின் 47வது பிறந்த நாளினை (02-07-2014 ) முன்னிட்டு- நடத்தப்பட்ட அறப்பணி நிகழ்வுகளின் விபரங்கள் இணைப்பு!
முதலாவது நிகழ்வு
அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாளினை முன்னிட்டு -அல்லையூர் இணையத்தின் ஆதரவுடன் திரு பொன்னுத்துரை ஸ்ரனிலோஸ் அவர்களினால் பிரான்ஸில் திரட்டப்பட்ட 120000.00 ஒருலட்சத்து இருபது ஆயிரம் ரூபாக்களைஆலயத்தின் பராமரிப்பாளரும்-பாதுகாப்பாளருமாகிய பெரியவர் திரு அல்பிரட் ஜோர்ஜ் அவர்களிடம் பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் ஒப்படைத்திருந்தார்.இதன் முழுமையான விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.
இரண்டாவது நிகழ்வு
திரு செல்லையா சிவாவின் பிறந்தநாளினை முன்னிட்டு- மட்டக்களப்பில் அமைந்துள்ள மிகவும் பின் தங்கிய கோடைமேடு ரூபா சிறுவர் கழக மாணவர்களின் கற்றலுக்குத் தேவையான புத்தகங்கள் கொம்பாஸ் போன்ற சிலவற்றை மாணவர்களுக்கு வழங்கியிருந்தோம்.
இது விளம்பரமல்ல….
அல்லையூர் இணையத்தின் ஊடாக நாம் ஆற்றிவரும் அறப்பணிகளை நீங்கள் நன்கு அறிவீர்கள்- தொடர்ந்தும் எம்மால் முடிந்த அறப்பணிச் சேவையினை உங்கள் பேராதரவோடு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எமது விருப்பம்-எனவே உங்கள் ஆதரவினை அல்லையூர் இணையத்திற்கு தொடர்ந்து வழங்கிட முன்வர வேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கின்றோம்.