தீவகத்திற்கு வருகைதரும் வெளிநாட்டு உள்நாட்டு உல்லாசப்பயணிகளில் பெரும்பாலானோர் தாம் செல்ல விரும்பும் இடமாக சாட்டி வெள்ளைக்கடற்கரையினையே தேர்வு செய்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது ஜரோப்பா-கனடா-அமெரிக்கா போன்ற நாடுகளில் வெயில் காலம் ஆரம்பித்துள்ளதனால் கோடை விடுமுறையினைக் கழிப்பதற்காக அதிகளவான உல்லாசப்பயணிகள் இலங்கைக்கு வந்த வண்ணம் இருப்பதாகவும்-இவர்களில் தீவகத்திற்கு வருகைதரும் உல்லாசப்பயணிகளில் பெரும்பாலானோர் முதலில் சாட்டி வெள்ளைக்கடற்கரையினை நோக்கியே செல்வதாகவும் மேலும் தெரியவருகின்றது.
இதற்கான காரணமாக -தீவகத்தில் நிலவும் கடும் வறட்சியும் வெப்பமுமே காரணமாக கூறப்பட்டாலும்- சாட்டி வெள்ளைக்கடற்கரையில் அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதே மேலதிக காரணமாக கூறப்படுகின்றது.
வேலணை பிரதேசசபையினால் பராமரிக்கப்பட்டு வரும் சாட்டி வெள்ளைக்கடற்கரையில் -நீர்மேல் செல்லும் நவீன மோட்டார் படகுகள்-அதிநவீன உணவகம்-சிறுவர் பூங்கா என்பவற்றுடன்-கட்டணக்கழிவறை-குளியலறை என்பனவும் மேலதிகமாக அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.