அல்லைப்பிட்டியில் குடியிருப்புகளுக்கு அருகில் மீண்டும்  விஷமிகள்   தீ வைப்பு-பேரழிவினைத் தடுத்த யாழ் மாநகரசபையின் தீ அணைப்புப்படை-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் குடியிருப்புகளுக்கு அருகில் மீண்டும் விஷமிகள் தீ வைப்பு-பேரழிவினைத் தடுத்த யாழ் மாநகரசபையின் தீ அணைப்புப்படை-படங்கள் விபரங்கள் இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURES

அல்லைப்பிட்டியில் வியாழன் இரவு   விஷமிகள் மீண்டும் மூட்டிய தீ பேரழிவினை ஏற்படுத்த இருந்த நிலையில் -வேலணை பிரதேசசபையும்-யாழ் மாநகரசபையின் தீ அணைப்பு பிரிவும்  உடனடியாக மேற் கொண்ட கடும் முயற்சியினால்  தீ மற்றைய இடங்களுக்குப் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத் தீயினால் மீண்டும் அதிகளவான பனைகள்  தென்னைகள்  தீயில் கருகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு வாரத்திற்குள் இரண்டாவது தடவையாக தீ வைப்புச் சம்பவம் இடம் பெற்று இருப்பதனால்-வேண்டுமென்றே விஷமிகள் தீ வைக்கின்றார்கள் என்று இப்பகுதி மக்கள்  தெரிவிக்கின்றனர்.

வியாழன் இரவு  மூட்டப்பட்ட தீயினை கட்டுப்படுத்த சற்றுத் தாமதித்து இருந்தால்  அருகிருந்த பல வீடுகள் எரிந்து நாசமாகியிருக்கும் என்று இப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இத்தீ வைப்புக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. 

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux