வன்னியில் பிரசித்தி பெற்ற-வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா (23.06-2014) திங்கட்கிழமை அன்று இரவு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து வந்த பக்தர்கள் புதூர் நாகதம்பிரானை தரிசித்தனர் என்றும் பல இடங்களிலும் இருந்து ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நலன் கருதி விஷேடபஸ் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்ததாகவும் – நேர்த்திக்கடன் செய்வோர் மற்றும் பொங்கல் வைக்கும் பக்தர்களுடன் பறவைக்காவடிகள், தீச்சட்டி, பாற்குடம் என்பனவற்றையும் தாங்கி ஆலயத்தை நோக்கி பெருமளவான பக்தர்கள் வந்திருந்ததாகவும் தெரியவருகின்றது.
இப்பொங்கல் திருவிழாவில் வவுனியா அரசாங்க அதிபர் திரு.பந்துல ஹரிச்சந்திர, நெடுங்கேணி பிரதேச செயலாளர் திரு.கே.பரந்தாபன், வடமாகாண சபை உறுப்பினர் திரு.தியாகராசா உட்பட பலர் கலந்து கொண்டதாகவும்-இரவு 12 மணிக்கு நடைபெற்ற-பண்டமெடுக்கும் நிகழ்வினைத் தொடர்ந்து நாகதம்பிரானுக்கு விசேட பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றதாகவும்- அதனைத் தொடர்ந்து இரவு முழுவதும் இசை நிகழ்சிகள் உட்பட பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாகதம்பிரானின் பொங்கல் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தியோடு கலந்துகொண்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.