மண்டைதீவின் மேற்குக் கரையில் அமைந்துள்ளதும்- மிகவும் பழமையான ஒரேயொரு சிவன் ஆலயமாகவும் விளங்கும் தில்லேஸ்வரத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று -இப்பகுதியைச் சேர்ந்த, சில இளைஞர்கள் ஒன்றிணைந்து சிரமதானப் பணியினை மேற் கொண்டிருந்தனர்.
மண்டைதீவு மக்களின் நிதிப்பங்களிப்புடன் சிவாலயத்தின் புனரமைப்புப் பணிகள் மெதுவாக நடைபெற்று வருகின்றது.
ஆடி மாதம் 9-07-2014 அன்று தில்லேஸ்வரருக்கு பாலாபிஷேகம் நடைபெறவுள்ளதாகவும் அதற்கு முன்னர் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்து விடும் எனவும் இவ்வாலயத்தோடு தொடர்புடைய ஒருவர் எமது இணையத்திற்கு தெரிவித்தார்.
கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற-சிரமதானப் பணிகளின் போது அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.