நெஞ்சு பொறுக்குதில்லையே!இந்த நிலை கெட்ட மனிதரை நினைக்கையிலே!
அல்லைப்பிட்டி மத்திய பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவுக்கடைக்கு கிழக்குப்பக்கமாக இருக்கும் பனங்காணிக்கு ஞாயிறு இரவு இனந்தெரியாத விஷமிகள் தீ மூட்டியதாகவும்- இத்தீயினால் நூற்றுக்கணக்கான பனைகள்,பனைவடலிகள்,தென்னைகள் என்பன எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தீயை, மற்றைய இடங்களுக்கு பரவவிடாமல் தடுப்பதற்காக சிலர் போராடிய போதிலும் –தீயி்ன் வேகத்தினை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. விடிய விடிய எரிந்த தீயின் கோரத்தால் ஏராளமான பனைகள்-தென்னைகள் கருகிப் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த திரு இராசப்பு கேதாரநாதன் அவர்களே இக்காணியின் உரிமையாளர் அல்லது பராமரிப்பாளர் என்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
காணி உரிமையாளரினால் ஊர்காவற்றுறை பொலிசாருக்கும் வேலணை பிரதேசசபைக்கும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திங்கள் காலை வேலணை பிரதேசசபையின் தவிசாளர் திரு சின்னையா சிவராசா அவர்கள் வருகை தந்து தீயினால் எரியுண்ட இடங்களைப் பார்வையிட்டதுடன்-இனிமேலும் இச்சம்பவங்கள் தொடராது இருக்க-பராமரிப்பற்றுக் கிடக்கும் காணிகளை அதன் உரிமையாளர்கள் காணிகளில் படர்ந்திருக்கும் பற்றைகளை வெட்டித் துப்பரவு செய்ய வேண்டடியதன் அவசியத்தையும்- அப்படிச் செய்வதனால் ஏற்படும் பெரும் தீ விபத்தைத் முடிந்த வரை தடுக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படங்களில் அழுத்திப் பார்வையிடுங்கள்!