புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும்-யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தடியை, வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முதியவர் நடராஜா அவர்கள் சனிக்கிழமை மாலை-தீவகம் சாட்டிக் கடலில் குளித்துக் கொண்டிந்த போது ஏற்பட்ட மாரடைப்பினால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தீவகம் சாட்டிக்கடற்கரையில் பாதுகாப்பு பணிகளில் இருந்த பொலிசார் முதியவரை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
முதியவர் நடராஜா அவர்களின் உடல் வேலணை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
மாரடைப்பில் காலமான முதியவர் நடராஜா அவர்களின் மனைவி திருமதி நடராஜா பரமேஸ்வரி அவர்கள் 18-05-2014 அன்று யாழ்ப்பாணத்தில் காலமாகியிருந்தார் என்றும்-அவரின் 31 வது நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸிலிருந்து வந்திருந்த மகள் மற்றும் உறவினர்களுடன் புங்குடுதீவில் உள்ள தனது காணிகளை பார்த்து விட்டு வீடு திரும்பும் வளியில் சாட்டி வெள்ளைக்கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் நடந்ததாக -தந்தையுடன் வந்திருந்த அவரது மகள் எமக்கு தொலைபேசி ஊடாக தெரிவித்தார்.