மண்கும்பான் செட்டிகாட்டில் அமைந்துள்ள வைரவர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் மற்றும் வேள்வித் திருவிழா-21-06-2014 சனிக்கிழமை காலை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திருவிழாவை முன்னிட்டு ஆலயம் அமைந்துள்ள பகுதிகளை ஊர்மக்கள் ஒன்று கூடி நேற்று முன் தினம் சிரமதானம் மூலம் துப்பரவு செய்தனர்.
தீவகத்தைப் பொறுத்த மட்டில் மிக மிக நீண்ட காலமாகவும் -பரம்பரை பரம்பரையாகவும்- பக்திபூர்வமாகவும்- நடைபெறுகின்ற திருவிழாக்களில் ஒன்றாகவே -மண்கும்பான் செட்டிகாட்டு வைரவர் ஆலய வேள்வித் திருவிழா நோக்கப்படுகின்றது.