அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயச் சுற்று மதிலின் ஒரு பகுதியினை செப்பனிடுவதற்கு தேவையான நிதியுதவியினை வழங்க முன்வருமாறு-இப்பாடசாலையில் கல்வி கற்று- புலம்பெயர்ந்து வாழும் மாணவர்களிடம் உரிமையோடு வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இப்பாடசாலையின் சுற்று மதிலானது நீண்ட காலமாக புனரமைக்கப்படாது விடப்பட்டிருந்த நிலையில்- அண்மையில் பாடசாலை நிர்வாகம் மேற்கொண்ட முயற்சியின் பலனாக முன்பக்க மதில் மட்டும் சீமெந்து பூசப்பட்டதுடன் இதன் பணிகள் இடை நிறுத்தப்பட்டு விட்டதாகவும்-அதபோல் பாடசாலையின் தெற்குப்புற மதிலையும் சீமெந்து பூசி வர்ணம் அடிப்பதற்குத் தேவையான நிதியினை வழங்கிட முன்வருமாறே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
புலம் பெயர்ந்து வாழும் இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் இவ்வேண்டுகோளுக்கு உடன்பட்டு உதவிட முன் வந்தால் -அதற்கான அனைத்து ஒத்தாசைகளையும் புரிவதற்கு அல்லையூர் இணையம் தயாராகவே உள்ளது என்பதனையும் அறியத் தருகின்றோம்.