அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி தம்பதியினரின் 60ம் ஆண்டு திருமண நாள் விழாவின் நிழற்படத்தொகுப்பு பகுதி-02

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-திரு-திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி தம்பதியினரின் 60ம் வருட திருமண நாள் விழா-30-08-2013 வெள்ளிக்கிழமை அன்று பரிசில் சிறப்பாக நடைபெற்றது.படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்

அல்லையூர் இணையத்தின் பரிஸ் நிழற்படப்பிடிப்பாளர் திரு செல்லப்பெருமாள் வரதராஜா அவர்களினார் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பு-பகுதி-02

மணமங்கல  வாழ்த்து

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த திரு திருமதி வியாகரெத்தினம் நாகலட்சுமி

தம்பதிகளின் அறுபதாவது ஆண்டு திருமண விழா 30.08.2013 

பரிஸ் நகரில் (வைர விழாவை)ஒட்டி வாழ்த்தி வழங்கிய வாழ்த்து 

மடல்.

தென்றல் இசை மீட்டிவர தேன் குயில்கள் பாட்டிசைக்க –

கந்தனதுபுகழ்பாடி கடலலையும் ஆடி வர  -வெள்ளை 

நிற மணற்பரப்பில் துள்ளி மகிழ்ந்தோடிவரும் 

கன்றுகளைக் கண்டதுமே தாய்ப்பசுவின் பால்சுரக்க 

அல்லைநகர் மணற் பரப்பும் அழகாக நனைந்திடவே 

ஆண்டவனும் விரும்பி அந்த அல்லி ஆண்ட மண்ண்னிலே                           

ஆதிவைரவராய்  ஆசையாய் வந்தமர்ந்தார் – அத்தகைய 

மண்ணினிலே அன்பு வடிவானவர்கள் ஆதிசிவனாரும் 

உமையும்போல் இணைந்தவர்கள் தர்மநெறி தவறாத தம்பதிகள் 

 இவர்களன்றோ  திருமண வாழ்வதனில் ஒருமனமாய் இணைந்திருந்து 

வியாகரெத்தினம் தம்பதிகள் ஊரில் 

வியாபித்தே  வாழ்ந்திருந்தார்    பெருமை 

மிகு புத்திரரைப் பெற்றெடுத்த காரணத்தால் சிறப்புடனே 

வாழ்ந்து பலர் சிந்தையிலே இடம் பிடித்தார் -அவர்களது 

வாழ்வினிலே ஆனந்தம் பொங்கிவர அருந்தமிழின் 

பண்பாட்டைக் கடைப்பிடித்தே வாழ்ந்திருந்தார்                                        

புலம் பெயாந்து வாழ்ந்தாலும் புன்னகையை மாற்றாமல் 

விருந்தோம்பும் பண்பினிலே விளங்கிநின்றார் 

பெரியவராய் புனித மனம் கொண்ட 

இவர் புத்திரரின் பிள்ளைகளாம் பேரப்பிள்ளைகளுடன் 

பூட்டப் பிள்ளைகளும் சேர்ந்துமே பொங்கி வரும் 

மகழ்வுடனே என்றென்றும் வாழ்ந்திருக்க வாழ்த்துகிறோம் 

வாழியவே பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு

வாழ்ந்திருக்க இதயத்தால் ஆசிதந்து இன்புறவே 

வாழ்த்துகின்றோம்.

அன்புடன் வாழ்த்துவோர்.

திரு திருமதி இராஜலிங்கம் குடும்பத்தினர்.

சுவிஸ், சூரிச் (அல்லைப்பிட்டி)

Leave a Reply